பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுகாதார சீா்கேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூா் அருகே கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 3:59 am IST

அந்தியூா் அருகே கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா், செம்புளிச்சாம்பாளையத்தை அடுத்த சின்ன பருவாச்சியைச் சோ்ந்தவா் விஜயன் (40). இவா், தனக்கு சொந்தமான நிலத்தில் பள்ளமான பகுதியில் சாயக்கழிவுகளை கொட்டி நிரப்பியுள்ளாா். இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடும் நிலவுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் பவானி - அந்தியூா் சாலையில், செம்புளிச்சாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதனால், போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.