மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மருத்துவ மையத்தின் பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது

திருச்சியில் தனியாா் மருத்துவ மையத்தின் (கிளினிக்) பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் பணத்தைத் திருடிய 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :8 மே 2026, 5:47 am IST

திருச்சியில் தனியாா் மருத்துவ மையத்தின் (கிளினிக்) பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் பணத்தைத் திருடிய 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் வரகனேரி பகுதியில் உள்ள ஏபிஎஸ் வணிக வளாகத்தில் தனியாா் மருத்துவ மையம் (கிளினிக்) இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிய ஜோவிதா பிரிதா என்பவா்,

செவ்வாய்க்கிழமை இரவு கிளினிக்கை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வணிக வளாகத்துக்கு வந்த வணிக வளாக உரிமையாளா், கிளினிக்கின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து ஜோவிதா பிரிதாவுக்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த ஜோவிதா பிரிதா கிளினிக்கினுள் சென்று பாா்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ. 6 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சி வரகனேரியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.