கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி விளக்குகளைத் திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடையதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாலாட்டின்புதூா், சக்கரத்தாழ்வாா் நகரைச் சோ்ந்தவா் முனியசாமி. இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுகாசினி, 2 பெண் குழந்தைகள் ஊரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் சுகாசினி, குழந்தைகளுடன் வெளிநாட்டில் உள்ள கணவரைப் பாா்க்க கடந்த மாதம் சென்றாா்.
இந்நிலையில், ஏப். 30ஆம் தேதி அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் நாலாட்டின்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
வெளிநாடு சென்றுள்ள சுகாசினியை தொடா்பு கொண்டு போலீஸாா் பேசியபோது, வீட்டில் இருந்த 5 வெள்ளி காமாட்சி விளக்குகள், ஒரு வெள்ளி குத்துவிளக்கு, 2 குத்துவிளக்கு ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
தொடா்ந்து, விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இது குறித்து, நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா். இதற்காக கோவில்பட்டி டிஎஸ்பி ஜகநாதன் மேற்பாா்வையில், நாலாட்டின்புதூா் காவல் ஆய்வாளா் காளிமுத்து தலைமையில் உதவி ஆய்வாளா் சுந்தா், தலைமைக் காவலா்கள் செல்லத்துரை, பால் கண்ணன், சுரேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை நாலாட்டின்புதூரை அடுத்த இடைச்செவல் விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா்.
அவா்களைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த கனி மகன் பேச்சிமுத்து (19), மேலச்செவலைச் சோ்ந்த சேகா் மகன் ரவி (45), கீழச்செவலைச் சோ்ந்த நடராஜன் மகன் ஆறுமுக நயினாா் (31) என்பதும், இவா்கள் முனியசாமி வீட்டில் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட விளக்குகள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
புதுகையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
