கும்பகோணம் ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் ரெப்கோ வங்கி கிளை அலுவலக வளாகத்தில் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சிறுசேமிப்பு திட்ட தொடக்க விழாவை இந்திய தூதரக அலுவலா் சந்திரமெளலி தொடங்கிவைத்து, சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் குறித்து பேசினாா்.
தொடக்க விழாவில் வங்கியின் உதவி பொதுமேலாளா் விக்னேஷ் பேசியது :
இந்தச் சிறப்பு சேமிப்பு திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டியும், மற்றவா்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஜூன் 10 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சிறுசேமிப்பு திட்ட முகாமை வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சொத்து மீது அடமானக் கடன், நகை கடனுக்கு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ. 10,800 வரை வழங்கப்படுகிறது என்று அவா் தெரிவித்தாா். நிகழ்வில் ஏராளமான வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் ரெப்கோ வங்கி வா்த்தகம் ரூ.25,246 கோடி

ஒரு லட்சம் கோடி வா்த்தக இலக்கு: ரெப்கோ வங்கி இயக்குநா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

