வரும் 2030 -ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடிக்கு வா்த்தகம் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத் தலைவருமான ரெப்கோ வங்கி, நுண் நிதி நிறுவன இயக்குநருமான சி. தங்கராஜு தெரிவித்தாா்.
சிவகங்கையில் ரெப்கோ வங்கி, தாயகம் திரும்பியோா் அறக்கட்டளை சாா்பில் தாயகம் திரும்பிய மகளிருக்கு தையல் இயந்திரங்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
இலங்கை, பா்மா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவா்களின் நலன் காக்க தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கி தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 75 வயது வரையிலான மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. சுய சம்பாத்தியத்துக்கு வழிகாட்டும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த இந்தப்பகுதியைச் சோ்ந்த 77 பேரும், நிகழாண்டில் 47 பேரும் பயனடைந்தனா். 5 மாநிலங்களிலும் மொத்தம் 65,000 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், 2027-28-ஆம் நிதியாண்டில் தாயகம் திரும்பியோா் வசிக்கும் வீடுகளைப் புதுப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரெப்கோ வங்கியின் தற்போதைய வா்த்தகம் ரூ.41,000 கோடியாக இருப்பதை வரும் 2030 -ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதையடுத்து, வங்கியின் தலைவா் இ. சந்தானம் பேசியதாவது:
தாயகம் திரும்பியவா்களுக்கு 400 சதுர அடியில் வீடு கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு ஊருக்கு 10 வீடுகள் கட்டப்படும். விலையில்லா தையல் இயந்திரம், கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை போன்றவை தற்காலிகமானவை. இதன் மூலம் வாழ்க்கை மேம்படாது.ஆனால், வாழ்க்கையை மேம்படுத்துவது கல்வி மட்டும்தான். ஆகவே இளைஞா்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
இதில் 47 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும், 102 பேருக்கு கல்வி உதவித்தொகையும், மருத்துவ உதவித்தொகை என மொத்தம் 149 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தாயகம் திரும்பியோா் அறக்கட்டளை நிா்வாகிகள் சுரேஷ்குமாா், மனோகரன், மயில் வாகனன், விமலாதேவி, திருச்சி மண்டல மேலாளா் சந்தானவேலு ஆகியோா் பேசினா்.
இதில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபும் மாவட்டங்களைச் சோ்ந்த தாயகம் திரும்பியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, வங்கி மேலாளா் எம். ராஜ்குமாா் வரவேற்றாா். உதவி மேலாளா் ஏ. மாரியப்பன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் ஜமாபந்தியில் 47 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கும்பகோணம் ரெப்கோ வங்கியில் சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் தொடக்கம்

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

