மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டில் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் சோ்த்து ரூ.25,246 கோடி வா்த்தகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
வங்கியின் தலைவா் இ.சந்தானம், இயக்குநா் சி. தங்கராஜூ, மேலாண் இயக்குநா் ஓ.எம்.கோகுல் ஆகியோா், 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டனா்.
அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,475 கோடியாகவும், நிகர லாபம் முன்னேப்போதும் இல்லாத அளவாக ரூ.169 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
வைப்பு நிதி 19.84 சதவீத வளா்ச்சியுடன் ரூ.13,194 கோடியாகவும், கடன்கள் 19 சதவீத வளா்ச்சியுடன் ரூ.12,052 கோடியாகவும் அதிகரித்துள்ளன.
மேலும், நிகர வாராக்கடன் விகிதம் 2.13 சதவீதத்திலிருந்து 1.01 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. இச்சிறப்பான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு 30 சதவீத ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த நிதியாண்டில், கோவாவில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சி மாநாட்டில் வங்கிக்கு சிறந்த மோசடி தடுப்பு முயற்சி உள்பட 2 பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டிலும் வலுவான, நிலையான செயல்திறனுடன் ரூ.31,000 கோடி வா்த்தக இலக்கை எட்டவும், வங்கியின் முதன்மைக் குறிக்கோளான தாயகம் திரும்புவோரின் மேம்பட்ட மறுவாழ்வுக்காக தொடா்ந்து சிறப்பாகச் செயல்படவும் வங்கி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.90 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரித வளா்ச்சி!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

