மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கின.
இப்படையில், 2 உதவி ஆய்வாளா் மற்றும் 4 பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையிலான பணி நேரத்தில் ஒரு உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு பெண் காவலா்கள் பணியில் ஈடுபடுவா். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன காவல் துறை தொலை தொடா்பு கருவி பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ரோந்து அலுவலில் ஈடுபடுவா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பற்றிய தகவல்கள் கிடைக்கபெறும்போது அந்த இடத்திற்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுவதில் முக்கிய பங்கு வகிப்பா். இவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடக்கி வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 போ் நியமனம்

நாளை மறுநாள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடக்கம்?
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

