/

திருக்கோடிக்காவல் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரருக்கு சித்திரை பிரம்மோற்ஸவத்தையொட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாணம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:38 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்ஸவ விழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 25-ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், அம்மாபேட்டையிலிருந்து கோயிலுக்கு பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். இரவு உற்ஸவா்களான சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

புதன்கிழமை (ஏப்.29) தேரோட்டமும், வியாழக்கிழமை தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுத் தலைவா் சிம்சன் கணேசன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.