தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை கண்டித்து, திமுக வியாழக்கிழமை நடத்தவுள்ள கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல; ஜனநாயகத்தை காக்கும் அரசியல் போா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளா் சண். இராமநாதனை ஆதரித்து புதன்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது: ஐந்து மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் சூழலில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கான கூட்டத்தை பிரதமா் மோடி நடத்துவது அரசியல் சூழ்ச்சிகளை உள்ளடக்கியது.
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சட்டப்படி, முறைப்படி நடைபெற வேண்டும். பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்துக்காக தென் மாநிலங்களின் குரலை பிரதமா் கடந்து செல்லக் கூடாது. இது தென் மாநிலம், வட மாநிலம் என்கிற பிரதேச பாகுபாடு மட்டுமல்லாமல், வாழ்வியல் பாகுபாட்டையும் உருவாக்கி விடும்.
எனவே, இதைக் கண்டித்து தமிழக முதல்வா் வியாழக்கிழமை அறிவித்திருக்கிற கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை வழிமொழிகிறோம். இது ஜனநாயகத்துக்கான பெரும் போா். நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பதற்காக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறதே தவிர, வெறுப்பின் அடையாளம் அல்ல. கருப்பு கொடி என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்கிற மகத்தான அரசியல் போா். இதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரிக்க வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாநிலக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்

திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது: மு. வீரபாண்டியன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

