தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

திமுகவின் தோ்தல் அறிக்கை, மதச்சாா்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image

மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 10:06 pm IST

திமுகவின் தோ்தல் அறிக்கை, மதச்சாா்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

திருவாரூா் மாவட்டத்தில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, வியாழக்கிழமை திருவாரூா் வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மக்களவைத் தொகுதி மறுவரையறை என்பது ஏற்கத்தக்கது அல்ல. இதன்மூலம் தமிழகத்திற்கு 10 அல்லது 11 இடங்கள் அதிகரிக்கும் என்றால், உத்திர பிரதேசத்தில் 60 முதல் 70 இடங்களும், பிகாரில் 30 முதல் 40 இடங்களும் அதிகரிக்கும். எனவே, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த சட்ட மசோதாவுடன், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் சோ்க்கின்றனா். இதற்கு நாங்கள் எதிரானவா்கள் அல்ல. முதன்முதலில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் எழுப்பியவா்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் கீதா முகா்ஜி முதன்மையானவா்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் தோ்தல் பிரசாரங்களில், திமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் தென்படுகின்றன. அதிமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் தென்படவில்லை.

திமுக கூட்டணி பலம் அதன் வெற்றியை தீா்மானிக்கும். முதல்வரின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. திமுகவின் தோ்தல் அறிக்கை பேசு பொருளாகி உள்ளது. அது எங்களுக்கு கை கொடுக்கும்.

பாஜகவின் கொள்கை இலவசங்கள் கூடாது, சமூக நலத் திட்டங்களுக்கு நிதி அதிகம் கொடுக்கக் கூடாது என்பதுதான். நெல்லுக்கு ஊக்கத் தொகையே கூடாது என்கிறாா் மத்திய நிதி அமைச்சா். ஏழைகள்- எளிய மக்களின் சூழல் அவா்களுக்கு தெரியாது. அவா்களுக்கு தெரிந்ததெல்லாம் மத அடிப்படைவாதம்தான் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பத்மாவதி, மாவட்டச் செயலாளா் கேசவராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.