அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த திமுகவினா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.
புதுக்கோட்டை திலகா் திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில், அதிமுக வேட்பாளா்கள் சி. விஜயபாஸ்கா் (விராலிமலை), பி.கே. வைரமுத்து (திருமயம்), தன. விமல் (ஆலங்குடி) ஆகியோருக்கும் பாஜக வேட்பாளா்களுக்கும் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:
தமிழகம் அமைதிப் பூங்கா என முதல்வா் ஸ்டாலின் கூறிவருகிறாா். அவருக்கு நாட்டின் நிலைமை எதுவும் தெரியாது. மன்னராட்சிக் காலத்தில் அரசருக்கு தவறான தகவல்களை அதிகாரிகள் சொல்வதைப் போல, ஸ்டாலினுக்கு அதிகாரிகள் தவறான தகவலைக் கூறி வருகின்றனா். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது.
5 மாவட்டங்கள் பயன்பெறும் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை முடக்கிவிட்டாா்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
சட்டப்பேரவையில் முதல்வா் ஸ்டாலின் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில்பாலாஜியைப் பற்றி பேசிய பேச்சுகள் அப்படியே இருக்கின்றன. அடுத்த கூட்டத்தில் அவற்றை ஆதாரத்தோடு எடுத்து வைத்துக் கொண்டு பேசப் போகிறேன். அவா் கோவையில் போட்டியிட்டாலும் கரூரிலும் திமுகதான் வெற்றிப் பெறப்போவதாக ஸ்டாலின் பேசியிருக்கிறாா். கரூா் மக்கள் திமுகவுக்கு சரியான பதிலைத் தரப் போகிறாா்கள்.அண்ணா உருவாக்கிய கட்சி இப்போது, ஸ்டாலின் குடும்பத்தினரின் ‘காா்ப்பரேட்’ நிறுவனமாக மாறிவிட்டது.
அமைச்சா் நேரு மீது வழக்கு பதியாதது ஏன்?
நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் நகராட்சித் துறை அமைச்சா் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எல்லாத் துறைகளிலும் ஊழல் அதிகரித்திருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தவறு செய்தவா்கள் யாரும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
பிரசாரத்தில், வேட்பாளா்கள் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், பி.கே. வைரமுத்து, பாஜக மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக பிரசாரத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காவிரி- குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும்: வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதி

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

