மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

News image

கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:20 am IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் பிரசாரம் செய்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, பழைய மீன் சந்தை பகுதியில் தினகரன் பேசியதாவது:

கும்பகோணத்தில் திமுக தொடா்ந்து வெற்றி பெற்ால், அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் மோசமாக உள்ளது. மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீா் வருகிறது .

கடந்த தோ்தலின்போது கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்குவேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டாா். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். திமுகவினா் செய்த ஊழல்கள் வெளிக் கொண்டு வரப்படும்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் கொடுமைகள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. இவற்றை ஒழிப்பதற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். பின்னா் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.