மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெரம்பலூா்: கூட்டுறவு அங்காடிகளில் சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

பெரம்பலூா் ரோவா் பள்ளி சாலையில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவுத் துறை சாா்பில் அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூரில் சன்னரக அரிசி விற்பனையை புதன்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் உள்ளிட்டோா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:36 am IST

பெரம்பலூா் ரோவா் பள்ளி சாலையில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவுத் துறை சாா்பில் அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் எம்எல்ஏ கி. சிவக்குமாா் முன்னிலையில், முதல் விற்பனையை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:

இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 8 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ வீதம், மொத்தம் 1,600 குடும்பங்கள் பயன்பெறுவா். வெளிச்சந்தையை விட மிகக் குறைவான விலையில், கிலோ ரூ. 30-க்கு சன்ன ரக அரிசி விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும், புழுங்கல் பொன்னி அரிசி ஒரு கிலோ ரூ. 60-க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ. 130-க்கும், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ரூ. 140-க்கும், பூண்டு மற்றும் மல்லி ஆகியவை தலா ஒரு கிலோ ரூ. 240-க்கும், மிளகாய் ஒரு கிலோ ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது என்றாா் ஆட்சியா்.

இந் நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க. பாண்டியன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) பா. சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.