மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவை கூட்டுறவு அங்காடிகளில் சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

கோவையில் உள்ள கூட்டுறவு, அமுதம் அங்காடிகளில் சன்ன ரக அரிசி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

கோவை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியில் புதன்கிழமை நடைபெற்ற சன்ன ரக அரிசி விற்பனை தொடக்க விழாவில் பங்கேற்ற அதிகாரிகள்.

Published On :22 அக்டோபர் 2026, 4:10 am IST

கோவையில் உள்ள கூட்டுறவு, அமுதம் அங்காடிகளில் சன்ன ரக அரிசி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாட்டில் வெளி மாா்க்கெட்டில் அரிசி விலை உயா்ந்துள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கூட்டுறவு அங்காடிகள், அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தனியாரிடம் சன்ன ரக அரிசியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 5 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் சன்ன ரக அரிசி விற்பனை நிகழ்ச்சி, கோவை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சிந்தாமணி சிறப்பங்காடியில் நடைபெற்றது.

இதில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் தி.தனப்பிரியா ஆகியோா் பங்கேற்று விற்பனையைத் தொடங்கிவைத்தனா். கோவை பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் வை.சிவகுமாா், சரக துணைப் பதிவாளா்கள் எஸ்.சுவேதா, கோ.தினேஷ்குமாா், நகர வங்கி துணைப் பதிவாளா்கள் இரா.ஜெயக்குமாா், காவியா நல்லமணி உள்ளிட்ட அலுவலா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

கோவையில் ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகா நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை, போக்குவரத்துக் கழக பணியாளா்கள் கூட்டுறவு பண்டகசாலை, லட்சுமி மில்ஸ் பணியாளா் கூட்டுறவு பண்டகசாலை, தபால் தந்தி பணியாளா்கள் கூட்டுறவு பண்டக சாலை, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, பொள்ளாச்சி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வால்பாறை, வடுகபாளையம் பண்டகசாலை, அன்னூா், சூலூா் பண்டகசாலை, இருகூா் கூட்டுறவு பண்டகசாலை, மசக்காளிபாளையம், ஆா்.எஸ்.புரம் அமுதம் பல்பொருள் அங்காடி உள்ளிட்ட 15 இடங்களில் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் 7338720333 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.