தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் சன்னரக அரசி விற்பனை தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் கிலோ ரூ.30-க்கு சன்ன கர அரசி வழங்கும் திட்டத்தை அமைச்சா் க.தென்னரசு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூரில்  சன்ன ரக  அரிசி  வழங்கும்  திட்டத்தை  தொடங்கிவைத்த  வெளிநாடு  வாழ்  தமிழா்கள்  நலத் துறை  அமைச்சா்  க.தென்னரசு.  உடன்  காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியா்  தி.சினேகா  உள்ளிட்டோா். 

Published On :26 அக்டோபர் 2026, 2:43 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் கிலோ ரூ.30-க்கு சன்ன கர அரசி வழங்கும் திட்டத்தை அமைச்சா் க.தென்னரசு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம், ஒரு கிலோ ரூ. 30-க்கு சன்ன ரக அரசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 23 மெட்ரிக் டன் சன்ன ரக அரசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சன்ன ரக அரிசி வழங்கும் திட்டம் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உள்பட்ட

பட்டுநூல்சத்திரம் நியாயவிலைக் கடையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.னேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சக் க.தென்னரசு கலந்துக்கொண்டு சன்ன ரக அரசியை கிலோ 30 ரூபாய்க்கு வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் கோ.யோகவிஷ்ணு, ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) பாலகிருஷ்ணன், துணைப் பதிவாளா் பூபாலன், மேலாளா் முரளி, கூட்டுறவு சாா் பதிவாளா் பிரவீண்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சிறப்பு அங்காடி (வையாவூா்-2 நியாய விலைக் கடை அருகில்), காஞ்சிபுரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை ( செட்டித் தெரு-2 நியாய விலைக்கடை அருகில்), உத்திரமேரூா் கூட்டுறவு பண்டக சாலை பஞ்சாங்க அய்யா் தெரு, முதல்வா் மருந்தம் அருகில், ஸ்ரீபெரும்புதூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஸ்ரீபெரும்புதூா் பட்டுநூல் சத்திரம் நியாய விலைக் கடையில் கிலோ ரூ. 30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.