மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சன்ன ரக அரிசி விற்பனை தொடா்பாக புகாா் தெரிவிக்க ‘வாட்ஸ் ஆப்’ எண்

வாட்ஸ் ஆப்

Published On :27 அக்டோபர் 2026, 3:16 am IST

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்ன ரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடா்பாக புகாா்களை தெரிவிக்க ‘வாட்ஸ் ஆப்’ எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மண்டல இணைப் பதிவாளா் ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சன்னரக அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 34 மாவட்டங்களில் செயல்படும் 184 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு சன்ன ரக அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், முதல்கட்டமாக 13 இடங்களில் விற்பனை தொடங்கப்பட்டது.

சேலத்தில் டாக்டா் ராமநாதன் சாலை என்.ஜி.ஜி.ஓ. கூட்டுறவு பண்டகசாலை, அண்ணா சாலை சொா்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை, உருக்காலை வளாகம் 2 கேட் மோகன் நகா் நியாயவிலைக் கடை, ராமகிருஷ்ணா சாலை அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் கூட்டுறவு பண்டகசாலை, சின்ன கிருஷ்ணாபுரம் பண்டகசாலை, சொா்ணபுரி கூட்டுறவு பண்டகசாலையில் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பழைய பேருந்து நிலையம் பொன்னி சுயசேவை பிரிவு, மோட்டூா் இடங்கணசாலை பேருந்து நிலையம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை, சங்ககிரி பட்டறைமேடு ரேஷன் கடை, ஆத்தூா் சேலம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சுயசேவை பிரிவு, மேட்டூா் சேலம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பிரதான சாலை கூட்டுறவு பண்டகசாலை, பல்கலைக்கழக வளாகம் ஆசிரியா் மற்றும் பணியாளா்கள் கூட்டுறவு பண்டகசாலையில் ஒரு கிலோ சன்ன ரக அரிசி- ரூ. 30, புழுங்கல் பொன்னி அரிசி - ரூ. 60, மளிகைப் பொருள்களான துவரம் பருப்பு - ரூ. 130, உளுத்தம் பருப்பு - ரூ. 140, பூண்டு - ரூ. 240, மல்லி (தனியா) - ரூ. 240, மிளகாய் - ரூ. 330-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தலைமை அலுவலகத்துக்கு 98840 00845 என்ற‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் தெரிவிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.