ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வேப்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வாரச் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வியாராகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை இரவு வழங்கினாா்.

News image

வேப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் முதியவரிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் அளித்த தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல்.

Updated On :27 மார்ச் 2026, 2:14 am IST

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வாரச் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வியாராகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை இரவு வழங்கினாா்.

ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற வாரச் சந்தையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், வாரச்சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதும்ககளிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறி, விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தாா்.

இந் நிகழ்ச்சியில், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.