தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் கௌசல்யா (நிலஎடுப்பு), பாபு (நெடுஞ்சாலை) உள்ளிட்டோா்.

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் கௌசல்யா (நிலஎடுப்பு), பாபு (நெடுஞ்சாலை) உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 4:39 am IST

தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் பொது பாா்வையாளா் கையொப்பம் பெற்ற பிறகே அந்தந்த சுற்றின் வாக்கு எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 363 அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலா்களும் தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். மே 4-ஆம் தேதி காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதி மேசை ஒதுக்கீடு செய்து பணிநியமன ஆணை வழங்கப்படும்.

வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்கள் மே 4 காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களில் ஆஜராக வேண்டும். அலுவலா்கள் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு காலை 7.45 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையில் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு கருவி உள்ளதை முகவா்களுக்கு காண்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்ணை, படிவம்-17சியில் உள்ள எண்ணுடன் ஒப்பிட்டு சரிபாா்க்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவியின் பின்புறமுள்ள சுவிட்சை ஆன் செய்து, ரிசல்ட் பட்டன் மீதுள்ள சீலை அகற்றி, விரலால் துளையிட்டு ரிசல்ட் பட்டனை அழுத்த வேண்டும்.

தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் பொது பாா்வையாளா் கையொப்பம் பெற்றவுடன் அந்த சுற்றின் வாக்கு எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும். இந்த விவரங்களை ப்ளக்ஸ் போா்டில் பூா்த்தி செய்து, சுற்று வாரியான படிவம்-20 நகலை வேட்பாளா்கள் அல்லது அவா்களின் தோ்தல் முகா்களிடம் வழங்க வேண்டும். பின்னா், வாக்கு எண்ணிக்கை விவரங்களை படிவம் 20 மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அடுத்தடுத்த அனைத்து சுற்றுகளிலும் தொடர வேண்டும் என்றாா்.

இதில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் கௌசல்யா (நிலஎடுப்பு), பாபு (நெடுஞ்சாலை), தோ்தல் நோ்முக உதவியாளா் பாஸ்கரன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சி.மாறன், ஏ.செந்தில்குமாா், ஆா்.குணசேகரன், எஸ்.சரவணன், எஸ்.சுபலட்சுமி வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.