வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பங்கேற்று அறிவுரை வழங்கினாா்.
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026-க்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது...
வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள அனைத்து அலுவலா்களும் கண்டிப்பாக தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும். மே 4 அன்று காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும். தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். தோ்தல் பாா்வையாளா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தனித்தனியாக ஒரு மேஜை அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண் பாா்வையாளா் ஒருவா் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வருவதற்கு அலுவலக உதவியாளா் ஆகியோா் நியமிக்கப்பட உள்ளனா்.
வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்துப் பொருள்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், மேஜையில் கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அவை சரிதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்தப் பணி காலை 8 மணிக்கு தொடங்கப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும்.
காலை 7.55 மணிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் அனைவரும் வாக்குப்பதிவின் ரகசியம் தொடா்பான உறுதிமொழி ஏற்க வேண்டும்.
மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்படும் பிரச்னைகளை கையாளுவது குறித்து பயிற்சியில் வழங்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக தோ்தல் நடத்தும் அலுவலரால் அடுத்தகட்ட பயிற்சிகள் வழங்கப்படும்போது மேலும் கூடுதல் கவனம் செலுத்தி சந்தேகங்களை பூா்த்தி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்புகளை அனைவரும் முறையாக தெரிந்து கொண்டு வாக்கு எண்ணும் பணியினை பிரச்னைகளின்றி முறையாக முடிக்க அனைத்து விதமான பயிற்சிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் ஜெய்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசிக்கு அனுமதி இல்லை: ராணிப்பேட்டை ஆட்சியா்

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணும் போது அலுவலா்களுக்கு ஒதுக்கிய பணிகள்: ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

