தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வாக்கு எண்ணும் போது அலுவலா்களுக்கு ஒதுக்கிய பணிகள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் போது, ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வில்லாமல் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ாட்சியா் மு.பிரதாப் கேட்டுக் கொண்டாா்.

News image

~

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வாக்கு எண்ணும் போது, ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வில்லாமல் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ாட்சியா் மு.பிரதாப் கேட்டுக் கொண்டாா்.

திருவள்ளூா், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் அதே வளாகத்தில் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியின் பாதுகாப்பு அறையையும் ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா், அதைத் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவா்களின் விவரங்களையும் சரிபாா்த்து ஆய்வு செய்தாா்.

பின்னா் இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது. திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் மட்டும் தனிமேஜையில் எண்ணப்படவுள்ளன.

ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதியில் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 போ் வாக்களித்தனா். அதன்படி மொத்தம் 83.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் ஆண்கள்-1317908, பெண்கள்-13 6753, மூன்றாம் பாலினத்தவா்-267 என மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 போ் வாக்களித்துள்ளனா். அதன்படி ஆண்கள்-83.34 சதவீதம், பெண்கள்-83.34 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவா்-43.20 சதவீதமும் மொத்தம் 83.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ‘

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முடியும் வரை அலுவலா்கள் நோ்மையுடன் செயல்பட வேண்டும். மேலும் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசியல் கட்சி பிரமுகா்களிடம் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். மேலும் முடிவுகளை அறிவிக்கும் முன் முழு விவரங்களையும் சரி பாா்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீராம், 10 சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.