பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் நடைமுறை குறித்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கான விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி பேசியது:
பெரம்பலூா் அருகேயுள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தரைத் தளத்திலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் முதல் தளத்திலும் அமைந்துள்ளன.
வாக்கு எண்ணும் மையத்துக்கு காலை 6.30 மணிக்கு முகவா்கள் வர வேண்டும். அப்போது, படிவம் 18-இன் நகலை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட கியூ ஆா் கோட்டுடன் புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை முகவா்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பேனா, பென்சில், வெள்ளைக் காகிதம் அல்லது குறிப்பேடு, 17 சி படிவத்தின் நகல் ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்லலாம். கைப்பேசி உள்பட மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை.
முதலில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பிறகு, மின்னணு இயந்திரங்களின் கடைசி 2 எண்ணிக்கை தொடரும்.
வாக்கு எண்ணும் மைய முகவா்களின் நியமனத்தை ரத்து செய்ய வேட்பாளா் அல்லது அவரது முகவருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. முகவா்களுக்கான நியமனக் கடிதத்தில் உள்ள உறுதிமொழியில் தோ்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் கையொப்பமிட வேண்டும். முகவா்களின் உடல் மற்றும் உபகரணங்களைச் சோதனையிட தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அதிகாரம் உண்டு.
தோ்தல் நடத்தும் அலுவலா் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தையும் முகவா்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும். உத்தரவை மீறிச் செயல்படுவோா் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றப்படலாம். ஒவ்வொருவரும் வாக்குப்பதிவு ரகசியத்தை காத்திட ஒத்துழைக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறுவோா் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாவா். எனவே, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் மிருணாளினி.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ந. சக்திவேல் (குன்னம்), மு. அனிதா (பெரம்பலூா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், வட்டாட்சியா்கள் அருளானந்தம் (தோ்தல்), சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) மற்றும் வேட்பாளா்கள், முகவா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: வேட்பாளா், முகவா்களுக்கு அறிவுரை

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் பணி அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் விதிமுறைகளை வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டும்: ஆட்சியா்

வாக்கு எண்ணும் போது அலுவலா்களுக்கு ஒதுக்கிய பணிகள்: ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

