பூலாம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, பெரம்பலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பூலாம்பாடி பேரூராட்சி முத்துமாரியம்மன் கோயில், மேற்கு பேருந்து நிலையம், மேல சீனிவாசபுரம், பஜனைமடக் கோயில், கடம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது:
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க்கடன், குறுகிய கால மற்றும் மத்திய கால கடன்கள் ரத்து செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கிலும் ரூ. 10 ஆயிரம் வரவு வைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, வேப்பந்தட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவசாயிகளின் நீா் மேலாண்மைக்காக விசுவக்குடி பகுதியில் ரூ. 32 கோடியில் அணைக்கட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலக்குணங்குடி பகுதி மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கப்பட்டுள்ளது. மேல சீனிவாசபுரம், கீழ சீனிவாசபுரம், பூபதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளேன். எனவே, இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித இம்முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது, கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பா. மோகன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

மக்காச்சோள சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளா் உறுதி

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

பெரம்பலூா் தொகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

