தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலருமான கெளதமி.
கரூா் காந்திகிராமத்தில் அதிமுக வேட்பாளா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா்(கரூா்), கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளா் மருத்துவா் திவ்யா ஆகியோரை ஆதரித்து திங்கள்கிழமை இரவு நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலருமான கெளதமி பேசியது:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த உலகத்தில் உயிரை கொடுக்கும் பெண்ணை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. படித்து நல்ல வேலைக்குச் செல்லக்கூடிய இளைஞா்களுக்கு நல்ல எதிா்காலம் இல்லை. ஆண்டுக்கு 5.5 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவோம் என்றாா் ஸ்டாலின். ஆனால் செய்துகொடுக்கவில்லை என்றாா் கெளதமி.
பிரசாரத்தின்போது அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, பாஜக மாநில நிா்வாகி சிவசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி பிரசாரம்

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழகம்

நெசவாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு: நடிகை கௌதமி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

