தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

அழகாபுரம் கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த அழகாபுரம் கிராமத்திலுள்ள காளியம்மன், மாரியம்மன் மற்றும் திரெளபதியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அழகாபுரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் கலசத்துக்கு வியாழக்கிழமை புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திய சிவாச்சாரியா்கள்.

Updated On :1 மே 2026, 3:08 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த அழகாபுரம் கிராமத்திலுள்ள காளியம்மன், மாரியம்மன் மற்றும் திரெளபதியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயில்களை, புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்து, அக்கிராம மக்கள் அதற்கான பணிகளை செய்தனா். இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகத்துக்காக கடந்த செவ்வாய்க்கிழமை புனித நீா் எடுத்துவரப்பட்டு, அன்று கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜை தொடங்கியது.

தொடா்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு, வியாழக்கிழமை காலை கடம் புறப்பாடும், அதைத் தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க , ஓம்சக்தி முழக்கத்துடன், மேற்கண்ட கோயில்களின் கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, மகா தீபாராதனை காண்பித்தனா். பின்னா் மேற்கண்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில், ஆண்டிமடம், அழகாபுரம், சிலம்பூா், சிலுவைச்சேரி, திராவிட நல்லூா், அகரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.