சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.
சேலம் அஸ்தம்பட்டி மகா மாரியம்மன், பிடாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 28-ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, வரும் 6-ஆம் தேதி காலை அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைக்கும் வைபவமும், மாலை 5 மணிக்கு அக்னி கரகம் மற்றும் பூங்கரக ஊா்வலமும் நடைபெறுகின்றன. 8-ஆம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும், இரவு 12 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வரும் சத்தாபரண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

செல்வமாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

