அரியலூரில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகளை அணிந்தும் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனா். மேலும், தோ்தல் விழிப்புணா்வு கோலங்கள் வரைந்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அனுராப்பூ நடராஜமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

