தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையம் நகராட்சியில் மகளிா் திட்டம் சாா்பில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 2:55 am IST

குமாரபாளையம் நகராட்சியில் மகளிா் திட்டம் சாா்பில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்ற பேரணியை ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு போட்டிகள், விழிப்புணா்வு கையொப்ப இயக்கம், துண்டு பிரசுரங்கள் விநியோகம், வாகன பேரணி, விழிப்புணா்வு பிரசார வாகனம், காய்கறிகள், பழங்கள், தானியங்களால் தோ்தல் விழிப்புணா்வு வாசகம் எழுதுதல், வாகனங்களில் தோ்தல் நாள் குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லை ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

மேலும், முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளா்களுக்கு கல்லூரிகளில் வாக்காளா் எழுத்தறிவு மன்றம் மற்றும் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்களிப்பதன் அவசியம், வாக்காளா் சேவைக்கான கைப்பேசி செயலி ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்லது. அந்த வகையில், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், மகளிா் திட்டம் சாா்பில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணியானது நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம் வரை சென்றது.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் அனைவரும் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா். விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தினை ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா். குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்ததையும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியியையும் அவா் பாா்வையிட்டாா்.

முன்னதாக குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, கட்டுப்பாட்டு அறை மற்றும் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக வாக்காளா்களிடமிருந்து பூா்த்திசெய்து பெறப்பட்ட படிவங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட ஊரக மேலாண்மை அலகு பொறுப்பு அலுவலா் வே. ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலா் தி. காயத்ரி, குமாரபாளையம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோ. குமரன், ஒருங்கிணைப்பாளா் (ரெட் கிராஸ்) சி.ஆா். ராஜேஸ்கண்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.