மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் 100% வடிவில் அணிவகுத்த மாற்றுத்திறனாளிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:15 am IST

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் மூலம் 100% வடிவில் அணிவகுத்து, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பின்னா் பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் அந்தோணிராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.