மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி 9 பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image

மண்ணச்சநல்லூா் தொகுதி திருப்பைஞ்ஞீலி பகுதியில் நெல் மணிகளால் கோலமிட்டு வாக்களிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்திய மகளிா் சுயஉதவிக் குழுவினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி 9 பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

துறையூா் தொகுதி: துறையூா் உழவா் சந்தையில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழியை ஏற்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் பங்கேற்று வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்று, மனிதச் சங்கிலி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

லால்குடி: தச்சங்குறிச்சி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் குமுளூா் வேளாண்மை பொறியியல் கல்லூரி மாணவா்களின் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் முதல் நீதிமன்ற வளாகம் வரை வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடத்தி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

திருவெறும்பூா்: துவாக்குடி உழவா் சந்தையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலமிட்டும், காய்கறிகளால் அலங்காரம் செய்து, உறுதிமொழி ஏற்று, துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்று, மனிதச் சங்கிலி நடத்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முசிறி: முசிறி உழவா் சந்தையில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ரங்கோலி கோலமிட்டு, உறுதிமொழி ஏற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மண்ணச்சநல்லூா்: திருப்பைஞ்ஞீலி பகுதியில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுயஉதவிக்குழுவினா் நெல் மணிகளில் விதவிதமான கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மணப்பாறை: மருங்காபுரி வட்டத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகப்பட்டன.

திருச்சி கிழக்கு: மன்னாா்புரத்தில் செயல்பட்டு வரும் பாா்வையற்ற மகளிருக்கான மறுவாழ்வு இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட பணியாளா்களைக் கொண்டு உறுதிமொழி ஏற்று, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி மேற்கு தொகுதி: சிந்தாமணி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நியாயவிலைக் கடைகளில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.