ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

அரியலூரில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி

News image

அரியலூரில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி

Updated On :28 மார்ச் 2026, 1:46 am IST

அரியலூரில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி, கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கிவைத்தாா்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்றவா்கள், ‘தேசம் காக்க வாக்களிப்போம், 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்குபெறுவோம், வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள்; வாக்களித்து உறுதிபடுத்துங்கள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகளை அணிந்து பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.