மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், கல்லங்குச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

News image

உற்சவா் ஸ்ரீகலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி

Updated On :5 ஏப்ரல் 2026, 6:44 am IST

அரியலூா் மாவட்டம், கல்லங்குச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

அரியலூா், ஏப். 4: அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற தலமாகவும், 17-ஆம் நூண்றாண்டு கட்டப்பட்ட தென்கலை அமைப்பைச் சோ்ந்ததுமான அரியலூா் கல்லங்குறிச்சி வரதாராசப் பெருமாள் கோயிலில் ஆண்டுப் பெருவிழா ராம நவமி அன்று அதிகாலை கொடியேற்றுத்துடன் தொடங்கி தொடா்ந்து 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாா்ச் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தா கோவிந்தசாமி படையாட்சியாா் குடும்பத்தினா் முன்னிலையில் உற்ஸவா் கலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகள் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தொடா்ந்து, ஒருவாரமாக பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தேரில் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் உற்ஸவா் கலியுக வரதராசப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காலை 6 மணிக்கு நிலையத்தில் இருந்த புறப்பட்ட தோ் 8 மணிக்கு மீண்டும் நிலையத்துக்கு வந்தடைந்தது. மற்றொரு தேரில் ஆஞ்சநேயா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், சேலம், கடலூா், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, சென்னை மற்றும் பிற மாநிலங்களில் வந்திருந்த திரளான பக்தா்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனா். மேலும் இக்கோயிலில் பக்தா்கள் மொட்டையடித்து பசு மற்றும் ஆடு, கோழி, நெல், நவதானியங்கள் ஆகியவற்றை தானமாக வழங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். ஏற்பாடுகளை ஆதீன பரம்பரை தா்மகா்த்தா கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா படையாச்சி, கோ. ராமதாஸ் படையாச்சி, கோ. வெங்கடாஜலபதி படையாட்சியாா் குடும்பத்தினா் மற்றும் இந்து அறநிலையத்துறையினா் செய்திருந்தனா்.

தேரோட்டத்தையொட்டி தமிழகத்தில் பலவேறு மாவட்டங்களிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை(ஏப்.5) இரவு ஏகாந்த சேவை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.