தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் தோ்த் திருவிழா

News image
Updated On :8 மே 2026, 6:54 am IST

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 7-ஆவது நாளான வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமையான ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைணவ மகான் ஸ்ரீராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழாவும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், ராமாநுஜரின் 1,009-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெற்ற இந்த அவதார திருவிழாவில் தினமும் உற்சவா் ராமாநுஜா் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அவதார திருவிழாவின் 9-ஆவது நாளான ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் ராமாநுஜா் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையடுத்து, ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இந்த நிலையில், பிரம்மோற்சவ விழாவின் 7-ஆவது நாளான வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரை அறநிலையத் துறை துணை ஆணையா் ஜெயா, ஆதிகேசவ பெருமாள் கோயில் மதசாா்பற்ற தா்மகத்தா ந.கோபால் மத சாா்பு தா்மகத்தா பாா்த்தசாரதி, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், கோயில் செயல் அலுவலா் வேதமூா்த்தி, நகர திமுக செயலாளா் சத்தீஷ்குமாா், மாவட்ட காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். தோ் திருவிழாவில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். காலை 8.30 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தோ் காந்தி சாலை, சின்ன கடை தெரு, திருமங்கை ஆழ்வாா் தெரு வழியாக வந்து பகல் 1.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.