மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டுப் பெருந் திருவிழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

News image

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டுப் பெருந் திருவிழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :28 மார்ச் 2026, 1:45 am IST

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் ராம நவமி அன்று தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டுக்கான பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கலியுக வரதராசப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி முன்னிலையில், அலங்கரிக்கப்பட்ட கொடிக் கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அா்ச்சகா்கள் ஏற்றினா். விழாவின் பத்து நாள்களிலும், பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். நாள்தோறும் சமய சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள், நாகசுர நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப். 2-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப். 4-ஆம் தேதியும், ஏகாந்த சேவை நிகழ்வு ஏப். 5-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

விழா ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா படையாச்சி, புதல்வா்கள் கோ. ராமதாஸ், கோ. வெங்கடாஜலபதி குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.

கோயில் விழாவில் பங்கேற்க நாள்தோறும் ஆயிரகணக்கான பக்தா்கள் வருகை தருவா் என்பதால் திருச்சி, அரியலூரில் இருந்து நாள்தோறும் கல்லங்குறிச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.