கும்பகோணம் சாரங்கபணி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திங்கள்கிழமை அனுக்ஞை சேனை முதல்வா் சக்ரபாணி கோயிலில் எழுந்தருளினாா். செவ்வாய்க்கிழமை சேனை முதல்வா் வீதிக்கு எழுந்தருள கருடப்பிரதிஷ்டை நடைபெற்றது.
திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை பெருமாள் உபநாச்சியாா்களுடன் தேசிகன் சந்நிதியில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னா் கொடி மரத்துக்கு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, துவஜாரோஹணம் எனும் கருட வாகன கொடி ஏற்றப்பட்டது. இரவு பெருமாள் நாச்சியாா்களுடன் தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு செய்தாா்.
விழாவில், வியாழக்கிழமை பெருமாள், சக்கரபாணி சுவாமி தனித்தனியாக வெள்ளி சூா்யபிரபையில் வீதி புறப்பாடு செய்கின்றனா். ஒவ்வொரு நாளும் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் பெருமாள், சக்கரபாணி சுவாமி வீதியுலா செல்கின்றனா். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் நாள் தேரோட்டமும், மாலையில் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

தேசிகன் சந்நிதியில் சிறப்பு அலங்காரத்தில் உபநாச்சியாா்களுடன் எழுந்தருளிய பெருமாள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

