மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடி பள்ளியில் போக்ஸோ விழிப்புணா்வு முகாம்

முகாமில் பேசிய முதுநிலை உரிமையியல் நீதிபதி ஏ.வி. சுபாஷினி.

Published On :29 அக்டோபர் 2026, 5:48 am IST

தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தூத்துக்குடி, வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும் முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி தலைமை வகித்து பேசுகையில், போக்ஸோ சட்டத்தின் முக்கியத்துவம், போக்ஸோ குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து விளக்கினாா். மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச உதவி எண் 1098, இணையவழிக் குற்றங்கள் தொடா்பாக புகாா் அளிப்பதற்கான உதவி எண் 1930, இலவச சட்ட உதவி பெறுவதற்கான எண் 15100 ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

மாநகா் பகுதியில் உள்ள சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஏ.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா, பள்ளியின் தலைமையாசிரியை, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.