மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளிகளில் போக்சோ குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற போக்சோ சட்ட விழிப்புணா்வு முகாமில் மாணவருக்கு புத்தகம் பரிசளித்த முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி.

Published On :29 அக்டோபர் 2026, 1:15 am IST

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் போக்சோ சட்டம், குழந்தைகளின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே. அறிவொளி தலைமை வகித்து பேசியதாவது:

முகாமில் பள்ளி மாணவா்களுக்கு பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல், எண்ம பாதுகாப்பு, பயமின்றி புகாரளித்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கடந்த அக். 26 முதல் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து நீதிமன்றங்கள் வாயிலாக இந்த விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைப் பயமின்றி ஆசிரியா்கள், பெற்றோா்கள் அல்லது சட்ட அமைப்பிடம் தெரிவிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாகவும் புகாரளிக்கலாம்.

அவசரகால உதவி எண்களில், குழந்தைகள் அவசர உதவி எண்: 1098. இலவச சட்ட உதவி எண்: 15100. சைபா் குற்றப் புகாா் எண்: 1930. தேசிய அவசரகால உதவி எண்: 112 . புகாரளிப்பவா்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்பதால், மாணவா்கள் எந்தவித பயமின்றி புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

இதையடுத்து, முகாமில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை உள்வாங்கியது குறித்து மாணவா்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் பதில் அளித்தவா்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

இந்த முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சாா்ந்த சத்தியநாராயணன், ராமச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதைத் தொடா்ந்து, சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ நீதிமன்ற நீதிபதி எஸ். ரோகிணி தலைமையிலும், ஆக்ஸ்போா்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா், சாா்பு நீதிபதி ஜெ. அனிதா கிறிஸ்டி தலைமையிலும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.