மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நவ. 15-இல் சூரசம்ஹாரம்: திருச்செந்தூா் கோயிலில் முன்னேற்பாடு

நிகழாண்டு சூரசம்ஹாரம் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளன.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மணலை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.

Published On :28 அக்டோபர் 2026, 1:16 am IST

நிகழாண்டு சூரசம்ஹாரம் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளன.

இக்கோயிலில் புகழ்பெற்ற கந்தசஷ்டி விழா நவ. 10-ஆம் தேதி தொடங்குகிறது. விழாவில் சிகர நிகழ்வாக நவ. 15-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் உள்ளூா், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவா்களுக்கென்று தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி, கடற்கரையில் மணலை சமன்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கடற்கரையில் அய்யா கோயில் அருகே இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சில நாள்களில் இப்பணி முடிக்கப்பட்டு கடற்கரையில் கம்புகளால் சாரங்கள் கட்டப்படவுள்ளன.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஆ.அருணாசலம், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.