மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்செந்தூா் கோயில் யாகசாலை இடம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் யாகசாலை இடமாற்ற விவகாரத்தில் கோயில் அறங்காவலா் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Published On :24 அக்டோபர் 2026, 12:48 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் யாகசாலை இடமாற்ற விவகாரத்தில் கோயில் அறங்காவலா் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையை இடமாற்றம் செய்யாமல், வழக்கமான அதே மண்டபத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என திருநெல்வேலியைச் சோ்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், முருகன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் நிா்வாகம் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரம் தொடா்பாக கோயில் அறங்காவலா்கள் குழு சாா்பில் ஒரு வாரத்தில் முடிவு தெரிவிக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் எடுக்கும் முடிவை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணை முடியும் வரை யாகசாலை பூஜை குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.