தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு விவகாரம்: அறநிலையத் துறை அறிக்கை அளிக்க உத்தரவு

கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு விவகாரத்தில் அறநிலையத் துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருப்பது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:34 am IST

இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களின் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் சபை அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய, கல்யாண பசுபதீசுவரா், ரவீசுவரா், குப்புச்சிபாளையம் விக்ருதீசுவரா் கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3,085 ஏக்கா் நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய பதிவுத் துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமாா் 3,085 ஏக்கா் பட்டா நிலங்களின் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இதனால், கோயில் நிலங்களை தனிநபா்களுக்கு பட்டா மாறுதல் செய்து பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்தும், சம்பந்தப்பட்ட இடங்களின் பத்திரப் பதிவுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை அறநிலையத் துறை ஆணையா் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.