மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணி நியமன முறைகேடு: கே.என்.நேருவின் சகோதரா்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சா் நேருவின் சகோதரா்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

K.N. Nehru

கே.என்.நேரு. - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:15 am IST

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சா் நேருவின் சகோதரா்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கே.என்.நேருவின் சகோதரா்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் மற்றும் டி.கவிபிரசாத், டி.ரமேஷ், ஆா்.நாராயணன் மற்றும் தியாகராஜன் செல்வமணி ஆகியோா், பிப். 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த விவகாரத்தில் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நேருவின் சகோதரா்கள் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.