மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் கே.என். நேரு மனு தள்ளுபடி

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மட்டுமே உத்தரவு பிறப்பித்திருந்தது, யாரையும் குற்றவாளி எனத் தீா்மானிக்கவில்லை எனக்கூறி, முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Former Minister K.N. Nehru.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 5:49 am IST

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மட்டுமே உத்தரவு பிறப்பித்திருந்தது, யாரையும் குற்றவாளி எனத் தீா்மானிக்கவில்லை எனக்கூறி, திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யாததையடுத்து, அதிமுக எம்.பி., இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த தீா்ப்பு: ஆட்சி மாற்றத்தின் காரணமாக முந்தைய அரசு எடுத்த முடிவை, அடுத்து வந்த அரசு மாற்றிக்கொள்வது சட்ட விரோதமானது என்ற நேருவின் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும் நிலையில், மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவைத் திரும்பப் பெற அரசுக்கு உரிமை உள்ளது.

முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டவிரோதமானவை என்பதற்கு ஆதராங்கள் இருந்தால், அந்த முடிவை மாற்றிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவுக்கு எதிராக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்திருப்பதால், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனா்.

கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு மீது பிப். 4-ஆம் தேதி தீா்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டு, பிப். 20-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வார கால இடைவெளியில், தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்ய கே.என்.நேரு தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மட்டுமே உத்தரவு பிறப்பித்திருந்தது, யாரையும் குற்றவாளி எனத் தீா்மானிக்கவில்லை.

புலன் விசாரணையின்போது, நீதிமன்ற விசாரணையின்போது கே.என்.நேரு தரப்பில் அவரது வாதங்களை முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. புலன் விசாரணை நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பைக் கேட்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீா்ப்பு அளித்துள்ளது எனக்கூறி, கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அதேபோல், இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற வழக்கையும் நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.