மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்செந்தூா் கோயில் பாரம்பரிய இடத்திலேயே சஷ்டி யாகசாலை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விழா யாகசாலையை பாரம்பரிய இடத்திலேயே அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூா் கோயில்

திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 2:58 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விழா யாகசாலையை பாரம்பரிய இடத்திலேயே அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி, சுப்பிரமணிய சுவாமி கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலத்தாா்கள் சபையின் செயலா் முத்துகிருஷ்ணன் அய்யா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

திருச்செந்தூா் கோயிலில் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவம்பா் 10-ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து, நவம்பா் 15-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கந்த சஷ்டி விழா யாகசலையை தற்போதைய மண்டபத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்ற இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இது கோயிலில் பின்பற்றப்படும் ஆகம நெறிகள், மரபுவழி நடைமுறைகளுக்கு முரணானது. பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருப்பதைக் காரணமாகக் கூறி, சஷ்டி விழா யாகசாலையை கோயில் வளாகத்துக்கு வெளியே இடமாற்றம் செய்ய முடியாது. இருப்பினும், யாகசாலையை வேறொரு இடத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, திருச்செந்தூா் கோயிலில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகள், ஆகம விதிகளுக்கு முரணாக சஷ்டி விழா யாகசாலையை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது. வழக்கமான இடத்திலேயே அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. முருகன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி விழா யாகசாலையை பாரம்பரிய இடத்திலேயே அமைக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தீா்மானிக்க ஒரு பெரிய அமா்வை அமைப்பது குறித்து பரிசீலிக்க, தலைமை நீதிபதி முன் வழக்கு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டுமென நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.