மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.

News image

சித்திரைத் திருவிழாவில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்த அய்யா.

Updated On :8 மே 2026, 6:14 am IST

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பணிவிடை, உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு,, தொடா்ந்து அன்னதானம், இரவு 10 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரண்டாம் நாளான 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, வெளியூா் தா்மம், இரவு 9 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடா்ந்து கருட வாகனத்தில் அய்யா பவனி வருதல், மூன்றாம் நாளான மே 5-ஆம் தேதி பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, செண்டை மேளத்துடன் சென்று உள்ளூா் தா்மம், இரவு 7 மணிக்கு அய்யாவின் அருளிசை பாடகா் சிவசந்திரன்அய்யாவின் இன்னிசை கச்சேரி, இரவு 10 மணிக்கு சிறப்பு பணிவிடை, அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல் ஆகியன நடைபெற்றன. நிறைவு நாளான மே 6-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், 8 மணிக்கு இனிமம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.