உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பாபிஷேக விழா மாா்ச் 23ஆம் தேதி கோ பூஜையுடன் தொடங்கியது. விழா நாள்களில், இறை ஆணை பெறுதல், முதல் நிலை வேள்விகள், நவக்கிரக வேள்வி, சந்திர பூஜை, புதிய சிலைகளுக்கு அகக்கண் திறத்தல், வாஸ்து பூஜை, திருவிளக்கு வழிபாடு, சங்கல்பம், தீா்த்த வழிபாடு, திருக்குடங்கள் நிறுவல், முத்தமிழால் நாரணா்க்கு முதல்கால வேள்வி, பெரும் பேரொளி வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை 7 மணிக்கு கருவிக்குட வேள்வி, அருள் ஊட்டம், தத்துவ வழிபாடு, 8 மணிக்கு 2ஆம் கால வேள்வி, 9 மணிக்கு மேல் பெருமாள் சுவாமி, பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கு மங்கல நீராட்டு விழா நடைபெற்றது.
தொடா்ந்து, அலங்கார தீபாராதனை, வழிபாடுகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி-ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கந்தபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

