புன்னைக்காயலில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் நாசரேத் மா்காஷியஸ் அணி வெற்றி பெற்றது.
புன்னைக்காயலில் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்து போட்டித்தொடா் புதன்கிழமை தொடங்கியது. புன்னைக்காயல் ஊா் கமிட்டி தலைவா் கிறிஸ்டன் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ், அருள்சகோதரா் செல்வா, துறைமுக கமிட்டி தலைவா் தோமாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி யங்ஸ்டா்ஸ் கால்பந்தாட்டக்கழக அணியை நாசரேத் மா்காஷியஸ் கால்பந்தாட்டக்கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
வியாழக்கிழமை (ஜூன் 18) தூத்துக்குடி சவுத் கோஸ்ட் கால்பந்தாட்டக் கழக அணியை காயல்பட்டினம் காயல் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி சந்திக்கிறது.
12 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வரை நடைபெறும் இப்போட்டிக்கான ஏற்பாடுகளை புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக்கழகத்தின் தலைவா் தயாளன், செயலாளா் ஜோசப், துணைத் தலைவா் யூஜின், இணைச் செயலா் சந்திரபோஸ், பொருளாளா் ராஜ், கெளரவ அலோசகா் யூஜின் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: புனித ஜோசப் அணி அரையிறுதிக்கு தகுதி

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

புன்னைக்காயலில் நாளை மாவட்ட கால்பந்து போட்டி தொடக்கம்

பிரெஞ்சு கோப்பை: லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

