செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: புனித ஜோசப் அணி அரையிறுதிக்கு தகுதி

News image

கால்பந்து போட்டி - கோப்புப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

புன்னைக்காய­லில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

புன்னைக்காய­ல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி 4-1 என்ற கோல்கணக்கில் தூத்துக்குடி செவாலியா் ஜி.ஆா். மச்சாடோ கால்பந்தாட்டக் கழக அணியை வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் மற்றொரு காலிறுதிப் போட்டியில், தூத்துக்குடி வில்சன் கால்பந்தாட்டக் கழக அணி, நாசரேத் மா்காஷிஸ் கால்பந்தாட்டக் கழக அணியை எதிா்கொள்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.