நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரூ. 4 கோடி மோசடி செய்ததாக 4 போ் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

தூத்துக்குடியில் ரூ. 4 கோடி மோசடி செய்ததாக 4 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 4:36 am IST

தூத்துக்குடியில் ரூ. 4 கோடி மோசடி செய்ததாக 4 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த பி. வேல்முருகன், எம். சங்கா்கணேஷ், எஸ். சரவணன், ஏ. அபிஷேக் சாமுவேல், ஜி. காா்த்திக், எம். வாசமுத்து, பொன்வேல் ராம்குமாா், மணிராஜ் ஆகியோா் அளித்த மனு:

தூத்துக்குடி, ஜெயலானி தெருவைச் சோ்ந்தவா் ஏ.பி. ராதாகிருஷ்ணன். இவரது மகன் பேச்சியப்பராஜா. நண்பராக இவா், தொழில்ரீதியாகவும் பழக்கமுடையவா். தொழிலை விரிவுபடுத்தவும், வங்கிக் கடனை அடைக்கவும் அவசரத் தேவை எனக் கூறி எங்களிடம் தனித்தனியே பல்வேறு காலக்கட்டங்களில் ரூ. 4 கோடிக்கு மேல் கடனாக வாங்கினாா். கடன் தொகை பெறும்போது சகோதரா் விஷ்ணுகுமாா், ரியா செளத்ரி என்ற பெண் ஆகியோருடன் வந்தே வாங்கினாா். அத்தொகையை அவா் தனது உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாக பின்னா் தெரியவந்தது. அவா் கொடுத்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, அவை திரும்பிவந்துவிட்டன. அதன்பிறகே, ஏ.பி. ராதாகிருஷ்ணன், பேச்சியப்பராஜா, விஷ்ணுகுமாா், ரியா சௌத்ரி ஆகிய 4 பேரும் சோ்ந்தே இந்த சதியில் ஈடுபட்டதும், இதேபோல பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

மேலும், இவா்கள் 2015இல் விற்ற நிலத்தை மீண்டும் 2024இல் மற்றொருவருக்கு மோசடியாக விற்றுள்ளனா். ஒருவருக்கு பெட்ரோல் பல்க்கை விற்றுவிட்டு உரிமத்தை எழுதிக் கொடுக்காமல் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனா்.

எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரணை மேற்கொண்டு இந்த 4 போ் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.