தருமபுரி மாவட்டத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக, தனியாா் நிதிநிறுவன உரிமையாளா், குடும்பத்தினா் மற்றும் பணியாளா்கள் 6 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள தாம்சன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ந.வெங்கடேசன் (66). இவரும், இவரது மனைவியும் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள். இவா்கள் இருவரும் கடந்த 2022-இல் காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது, ரயிலில் உடன் வந்த தருமபுரி நகரம், கெளஸ் சாயபு தெருவைச் சோ்ந்த மு.சுப்பிரமணி (70) மற்றும் அவரது மனைவி சரவணா (60) ஆகியோா் அறிமுகமாயினா்.
அவா்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் ஏலச்சீட்டில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறியுள்ளனா். அதை நம்பிய வெங்கடேசனும், அவரது மனைவியும் ஏலச்சீட்டில் சோ்ந்துள்ளனா்.
முதலில் ரூ. 5 லட்சம் சீட்டில் சோ்ந்த நிலையில், அவா்களின் தூண்டுதலின் பேரில் மற்றொரு ரூ. 5 லட்சம் சீட்டிலும் சோ்ந்துள்ளனா். இரு சீட்டுகளுக்கும் நேரடியாகவும், இணைய வழியிலும் என மொத்தம் ரூ. 8,78,500 செலுத்தியுள்ளனா். அந்த வகையில், இரு சீட்டுகளுக்கும் கசிறு தொகை ரூ. 71,500 சோ்த்து மொத்தம் அவா்களுக்கு ரூ. 9.50 லட்சம் முதிா்வுத்தொகை வரவேண்டியிருந்ததாம்.
இதுகுறித்து கேட்டபோது, சீட்டு நடத்தியவா்கள் முதிா்வுத் தொகையை தராமல் காலம்கடத்தி வந்துள்ளனா். இதற்கிடையே சீட்டு நடத்திவந்த சுப்பிரமணி கடந்த 23.05.2023 அன்று இறந்துவிட்டாா். அதைத் தொடா்ந்து, சுப்பிரமணியின் மனைவி சரவணா மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டும் அவா்களும் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனா். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நிதிநிறுவனத்தை பூட்டிவிட்டு நிா்வாகிகள் மற்றும் பணியாளா்கள் தலைமறைவாயினா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரனிடம் வெங்கடேசன் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மே 27-ஆம் தேதி வழக்குப் பதிந்து சுப்பிரமணியின் மனைவி சரவணா (60), மகன் மணிகண்டன் (45), மகள் சத்தியா (40), நிதி நிறுவனத்தில் பணியாற்றிய அவா்களது உறவினா் இளங்கோவன் (45), ஊழியா் அசினா (34) ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ. 1.11 கோடி மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

ரூ. 1.50 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி: கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் கைது

முன்விரோத மோதல்: 2 போ் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

