விசாரணையின்போது தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளா் ந.கு. லெனின் அளித்த மனு விவரம்:
மானாமதுரையைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை, விசாரணை என்ற பெயரில் மாா்ச் 6-ஆம் தேதி அழைத்துச் சென்று, அடித்து காலை உடைத்து தாக்கினா். இதனால், மாா்ச் 8-இல் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்தாா்.
இவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டு, 100 நாள்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கொலை செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசனின் பெற்றோா், தனது மகனின் உடலைக் கூட வாங்காமல் தற்போது வரை நீதி கேட்டு போராடி வருகின்றனா். எனவே, மதுரை உயா்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி, கொலை வழக்கு மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கில் 18 காவலா்கள் பெயரை சோ்த்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் விசாரணை அனைத்தும் விடியோ பதிவு செய்ய வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா பொருத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலீஸாரைக் கண்டித்து மேகமலை விவசாயிகள் தா்னா

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

பாசன கால்வாய்களை தூா்வார வேண்டும்! ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

