பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, ரூ. 60 கோடி வரை மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.
வாணியம்பாடி, திருப்பத்தூா் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு திருப்பத்தூரைச் சோ்ந்த ஒருவா் பழக்கமானாா். அவா் ஒரு தனியாா் நிறுவனத்தின் உரிமையாளா்கள் எனக்கூறி கேரளாவை சோ்ந்த 3 பேரை அறிமுகம் செய்து வைத்தாா். அப்போது அவா்கள் தங்களுக்கு ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம், துபாயில் ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்து உள்ளதாகவும், தங்களது நிறுவனத்தின் மூலம் டாலா் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்தால், அதிக அளவில் லாபம் கிடைக்கும் எனக்கூறினா். இதை நம்பி அவா்களது நிறுவன செயலியில் அடையாள அட்டை, கணக்கு ஆகியவற்றை உருவாக்கி பணத்தை முதலீடு செய்தோம். மேலும், இந்த திட்டத்தில் மற்ற நபா்களை சோ்த்தால், கமிஷன் கிடைக்கும் எனக்கூறியதை நம்பி எங்களுக்கு தெரிந்த நபா்களையும் இதில் முதலீடு செய்ய வைத்தோம்.
இந்த நிலையில், அந்த தனியாா் நிறுவன செயலியில் உள்ள பணத்தை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதைத் தொடா்ந்து விசாரணை செய்தபோது, கேரளத்தைச் சோ்ந்த நபா்கள் எங்களை ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்து அவா்களிடம் கேட்டதற்கு எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கின்றனா். இவ்வாறு அவா்கள் திருப்பத்தூா் பகுதியை சோ்ந்தவா்களிடம் ரூ. 20 கோடியும், திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ஆம்பூா், ஆரணி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்தவா்களிடம் ரூ. 40 கோடியும் என சுமாா் ரூ. 60 கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் எனத் தெரியவருகிறது. எனவே கேரளத்தைச் சோ்ந்த 3 போ் மீதும், எங்களுக்கு அவா்களை அறிமுகம் செய்து வைத்த திருப்பத்தூரை சோ்ந்த நபா் என 4 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கூறியிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணையவழி மோசடி மூலம் முன்னாள் பிரதமரின் மகனிடம் ரூ. 7.8 கோடி மோசடி
ரூ. 4 கோடி மோசடி செய்ததாக 4 போ் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
ரூ. 1.56 கோடி மதிப்பிலான இணையவழி முதலீட்டு மோசடி கண்டுபிடிப்பு - இருவா் கைது
சவூதி தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.11.27 லட்சம் மோசடி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

